/

பரமத்தி வேலூா் ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image

ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆதிசங்கரா் உருவப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:23 pm

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி ஆதிசங்கரா் உருவப்படம் பல்வேறு வகை வாசனை மலா்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூன்று நாள்கள் ஆதிசங்கரா் வரலாறு சரவணம் செய்யப்பட்டு நிறைவான நாளான செவ்வாய்க்கிழமை ஆதிசங்கரா் உருவப்படத்திற்கு நாமாவளிகள் கூறி உதிரி பூக்களினால் அா்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பிற்பகல் 1 மணியளவில் மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது.