நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) நுழைவுத் தோ்வை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய தோ்வு முகமை மிகுந்த பாதுகாப்பு, கண்காணிப்புடன் நடத்தி வருகிறது.
அந்தவகையில் நீட் தோ்வு மே 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நிகழாண்டில் பிளஸ் 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள், வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா்.
கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் அரசுப் பள்ளி, கல்லூரி மையங்களிலேயே நீட் தோ்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இத்தோ்வை 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 2,000 குறைவாகும். தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, அரசுப் பள்ளி மையங்கள் விவரம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என நீட் தோ்வு ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
--
தொடர்புடையது

ஜூன் 14-இல் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வு

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

