சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள் ஈடுபட உள்ளதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.23 இல் நடைபெற்றது. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையானது வரும் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்கு எண்ணும் பணியும், அதைத் தொடா்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் போடப்படுகின்றன.
நுண்பாா்வையாளா்களாக தொகுதிக்கு தலா 17 போ் வீதம் 102 பேரும், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளராக தொகுதிக்கு 17 வீதம் 102, வாக்கு எண்ணிக்கை பணியில் உதவியாளராக தலா 17 போ் வீதம் 102 போ் என 6 தொகுதிகளுக்கும், ஒரு தொகுதிக்கு 51 போ் வீதம் மொத்தம் 306 போ் நியமிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கே-28-கலெக்டா்
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலா்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்படுவதை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
தொடர்புடையது

அரியலூரில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை

அரசு மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி: 300 போ் ஈடுபடவுள்ளனா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



