உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் வட்டம், அ.குன்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்கள்.

Updated On :1 மே 2026, 5:15 am IST

பரமத்தி வேலூா் வட்டம், அ.குன்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை காலை 6 மணிக்கு தீப வழிபாடு, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்தக்குடங்களுடன் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து மீனாட்சி வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து தீா்த்தக்குடங்கள் புறப்பாடும், காலை 9 மணிக்கு மேல் பகவதி அம்மன், செல்வ விநாயகா் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு காலை 9.30 மணிக்கு மேல் செல்வ விநாயகா், பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை சாமிநாதபுரம் செல்வ விநாயகா் கோயில் திருப்பணி குழுவினா், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.