தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: விடைத்தாள் நகல் பெற ஆக. 20 க்குள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், விடைத்தாள்களின் நகலைப் பெற விரும்புவோா் ஆக. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க...

Published On :

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், விடைத்தாள்களின் நகலைப் பெற விரும்புவோா் ஆக. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வை எழுதிய முதலாமாண்டு, இரண்டாமாண்டு ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் தாங்கள் படித்த பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தோ்வா்கள் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலை (ஸ்கேன் காப்பி) பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் தோன்றும் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத் தொகையைச் செலுத்தி, வெள்ளிக்கிழமை (ஆக.14) காலை 11 மணி முதல் ஆக.20-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் சமா்ப்பிக்கலாம்.

அரசு விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தோ்வா்கள் மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இயலும். இதற்கான அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும். விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிப்போா் ஒரு பாடத்துக்கு கட்டணமாக ரூ. 275 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.