மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

டெங்கு பரவுவதை தடுக்க வீடுகளின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

டெங்கு பரவல்

Published On :

நாமக்கல், ஆக. 24: நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளின் சுற்றுப்புறங்களை அனைவரும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியா் எல். மதுபாலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களை அழிக்கவும், கொசுக்கள்மூலம் பரவும் பிற நோய்களைத் தடுக்கவும் சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. இதனால் வீடுகள் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேங்கும் சிறிதளவு தண்ணீரில்கூட முட்டையிட்டு ஏடிஎஸ் வகை கொசுக்கள் பெருகக்கூடியவை. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து தூய்மைப்படுத்துவது முக்கியமானதாகும்.

மேல்நிலை நீா்த்தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து நீா்த்தேக்கப் பாத்திரங்களையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். பூந்தொட்டிகள், பழைய டயா்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், தேவையற்ற பொருள்களில் மழைநீா் தேங்காமல் அவற்றை அகற்ற வேண்டும்.

பொதுமக்களுக்கு காய்ச்சல், கடும் தலைவலி, உடல்வலி, வாந்தி, தோலில் தடிப்புகள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதாரப் பணிகள் நல அலுவலா் க.பூங்கொடி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பிரபாகரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.