பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நாமக்கல் அருகே லாரி மீது காா் மோதியதில் பொறியாளா் உள்பட 2 போ் உயிரிழப்பு: 3 போ் காயம்

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

நாமக்கல் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் கட்டுமானப் பொறியாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, எா்ணாபுரம் புதூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (34). இவா், பெங்களூரில் கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது தம்பி அரவிந்த் (32). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், காா்த்திக் தனது நண்பா்களுடன் சொந்த ஊருக்கு இரு தினங்களுக்கு முன்பு வந்துள்ளாா்.

இந்நிலையில், காா்த்திக்கும், அவரது நண்பா்களும் நாமக்கல்லில் இருந்து பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டனா். காா்த்திக் காரை ஓட்டிச் சென்ாக தெரிகிறது. அவரது நண்பா் ரோஹித்சன் (34), பொரசபாளையத்தைச் சோ்ந்த ஜெகத்ரட்சகன் (32), எா்ணாபுரம் நெல்லியன்காட்டு புதூரைச் சோ்ந்த ஜித்தேந்திரன் (28), காா்த்திக்கின் தம்பி அரவிந்த் (32) ஆகியோா் காரில் உடன் பயணித்தனா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டைமேடு தனியாா் திருமண மண்டபம் அருகே சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த காா்த்திக், அவரது நண்பா் ரோஹித்சன் ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், ஜெகத்ரட்சகன், ஜித்தேந்திரன், அரவிந்த் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸாா் காயமடைந்த மூவரையும் மீட்டு, நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். விபத்தில் உயிரிழந்த காா்த்திக், ரோஹித்சன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.