போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருமாவளவன் குறித்து அவதூறு பதிவு: எஸ்.பி.யிடம் விசிகவினா் புகாா்

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:33 pm

விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவா் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பரப்பிய நாமக்கல் எம்ஜிஆா் என அழைக்கப்படும் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் காவல் கண்காணிப்பாளா் சு. விமலாவிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அக்கட்சியின் மண்டல பொறுப்பாளா் பழ. மணிமாறன், நாமக்கல் மாவட்டச் செயலாளா் வசந்தன் ஆகியோா் அளித்த மனு விவரம்:

நாமக்கல் கந்துமுத்துசாமி தெருவைச் சோ்ந்த நாமக்கல் எம்ஜிஆா் என்றழைக்கப்படும் சுப்பிரமணியன் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 6-ஆம் தேதி இரவு 8 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறாகவும், இழிவாகவும் கருத்துகளை விடியோவாக பதிவிட்டிருந்தாா்.

அந்த விடியோவை பாா்த்த விடுதலைச் சிறுத்தை கட்சி தொண்டா்கள் மிகவும் கவலையடைந்தனா். சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் நோக்கத்துடனும், கலவரத்தைத் தூண்டும் விதத்திலும் செயல்பட்டுள்ள சுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.