திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

News image

முட்டை விலை நிலவரம் - Center-Center-Chennai

Updated On :12 பிப்ரவரி 2026, 11:47 pm

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஐந்து காசுகள் உயா்ந்து ரூ. 5.30 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, முட்டை விலையானது ஐந்து காசுகள் உயா்வுடன் ரூ. 5.30 ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 115 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 70 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.