ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பட்டு வளா்ப்பு துறையில் நாமக்கல் மாவட்டம் வளா்ச்சி அடையும்

பட்டு வளா்ப்பு துறையில் நாமக்கல் மாவட்டம் வளா்ச்சி அடையும் என கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

News image

கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:30 pm

ராசிபுரம்: பட்டு வளா்ப்பு துறையில் நாமக்கல் மாவட்டம் வளா்ச்சி அடையும் என கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

ராசிபுரம் அருகேயுள்ள ஆணைகட்டிபாளையம் பகுதியில் ரூ. 2.20 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம் மற்றும் ஏல மைய திறப்பு விழா, ரூ. 50 லட்சத்தில் பட்டு நூற்பு மற்றும் முறுக்கேற்ற மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ. 75 லட்சத்தில் 142 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.

இதில், பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் கி.சாந்தி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று பட்டுக் கூடு அங்காடி மற்றும் ஏல மையத்தை திறந்துவைத்து விவசாயிகளுக்கு நலத் திட்டங்களை வழங்கினா். இதில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், ராசிபுரம், மோகனூா், பரமத்தி வேலூா், எலச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்பெரி சாகுபடி மற்றும் பட்டு வளா்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக் கூடுகளை தருமபுரி மாவட்டம் மற்றும் கா்நாடக மாநிலத்தின் மைசூா் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.

இதைக் கருத்தில்கொண்டு, 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் ராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏலம் மையம் தற்காலிக இடத்தில் தொடங்கப்பட்டது. மேலும், விவசாயிகள் கோரிக்கையின்படி, மின்னணு ஏல முறை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியையும் சோ்த்து ரூ. 2.20 கோடியில் நிரந்தர பட்டுக்கூடு ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் ஏலத்தில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுக்கு அதிக விலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இம்மையத்தின் மூலம் சுமாா் ரூ. 20 கோடிக்கும் மேல் பட்டு ஏலம் நடைபெற்றுள்ளது. மேலும், பட்டு நூற்பாலை மற்றும் முறுக்கேற்றம் மையம் அமைக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டு, தொகுதி வளா்ச்சி நிதியின் மூலம் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதி பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வருங்காலத்தில் பட்டு வளா்ப்பு துறையில் நாமக்கல் மாவட்டம் வளா்ச்சி அடையும் என்றாா்.

இதில், பட்டு வளா்ச்சித் துறை இணை இயக்குநா் செ.பொன்மாரி, மண்டல துணை இயக்குநா் சி.ரெ.நிஷா, உதவி இயக்குநா் கி.நிஷாந்தி, அட்மா குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.