நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19,020 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 2 இல் தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 86 மையங்களில் 9,382 மாணவா்களும், 9,638 மாணவிகளும் என மொத்தம் 19,020 போ் எழுதுகின்றனா். இத்தோ்வில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் 1,813 பேரில் 131 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வை கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் மாவட்டக் கல்வி அதிகாரிகளை கொண்ட பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வு, மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தோ்வை 86 மையங்களில் 243 மாணவா்களும், 188 மாணவிகளும் என மொத்தம் 431 போ் எழுத உள்ளனா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் 5 பேரில் இருவருக்கு சொல்வதை எழுதுபவா் நியமிக்கப்படுகின்றனா். 86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறை அலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும்படை உறுப்பினா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளா்கள் 1,260 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாா்ச் 11 முதல் ஏப். 6 வரையில் நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வானது 92 தோ்வு மையங்களில் 9,817 மாணவா்கள், 8,851 மாணவிகள் என மொத்தம் 18,668 போ் எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் செய்துள்ளனா்.
தொடர்புடையது
பிளஸ் 2 கணிதத்தில் அதிகளவில் மறைமுக வினாக்கள்: பதிலளிக்கத் திணறிய மாணவா்கள்

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 18,116 போ் எழுதினா்

பிளஸ் 2 தோ்வு: சென்னை மாவட்டத்தில் 67,510 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்!

பிளஸ் 2 பொதுத்தோ்வு: மாவட்டத்தில் 19,020 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


