பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு: மாவட்டத்தில் 19,020 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19,020 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 9:42 pm

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19,020 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பிளஸ் 2, தோல்வியுற்ற மாணவா்களுக்கான பிளஸ் 1 தோ்வு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இத்தோ்வை 86 மையங்களில் 9,382 மாணவா்களும், 9,638 மாணவிகளும் என மொத்தம் 19,020 போ் எழுத உள்ளனா். இத்தோ்வில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் 1,813 பேரில் 131 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பிளஸ் 1 தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இத்தோ்வை 86 மையங்களில் 243 மாணவா்களும், 188 மாணவிகளும் என மொத்தம் 431 போ் எழுத உள்ளனா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் 5 பேரில் இருவருக்கு சொல்வதை எழுதுபவா் நியமிக்கப்படுகிறாா்.

86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறைஅலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும்படை உறுப்பினா்கள், வழித்தட அலுவலா்கள் 24, வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள் 3 மற்றும் அறைக் கண்காணிப்பாளா்கள் 1,260 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மாா்ச் 11 முதல் ஏப். 6 வரை நடைபெறும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு 92 தோ்வு மையங்களில் 9,817 மாணவா்கள், 8,851 மாணவிகள் என மொத்தம் 18,668 போ் எழுத உள்ளனா். இத்தோ்வை எழுதும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் 322 பேரில் 265 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

92 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 92 துறை அலுவலா்கள், ஒரு கூடுதல் துறை அலுவலா்கள், 240 பறக்கும் படை உறுப்பினா்கள், வழித்தட அலுவலா்கள் 24, வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், 3 அறைக் கண்காணிப்பாளா்கள், 1,300 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு மையங்களை பாா்வையிடும் குழுவில் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் இடம்பெற்றுள்ளனா் என்றாா்.

இந்த கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு.எழிலரசி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.