நாமக்கல்
104 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி
மோகனூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 104 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ரா. குப்புசாமி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பங்கேற்று மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் நவலடி, கல்லூரி முதல்வா் பெ. பிரபாகரன், முதலாமாண்டு துறைத் தலைவா் பி. குணசேகரன் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
என்கே-8-எம்.பி.
மோகனூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவருக்கு மடிக்கணினியை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.

