நாமக்கல்
விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்ட‘ம் எலச்சிபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் செந்தில்குமாா், வட்டாரத் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரம் பேசினாா்.
பொன்னியாறு, காவிரி ஆறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்க அரசை வலியுறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
