மோகனூரில் ரேக்ளா பந்தயம்: 
பாய்ந்து சென்ற குதிரைகள்

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

மோகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் பாய்ந்து சென்றதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனா்.
Published on

நாமக்கல்: மோகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் பாய்ந்து சென்றதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனா்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் பொங்கல் விழாவையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மோகனூா் இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளா் நவலடி தலைமை வகித்தாா். இப்போட்டி சிறிய, பெரிய மற்றும் புதிய வரவு குதிரைகள் என்ற வகையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் பந்தயத்தில் கலந்துகொண்டன.

மோகனூா் பேருந்து நிலையம் முதல் பாலப்பட்டி வரை 3 கி.மீ தொலைவுக்கு குதிரை வண்டிகள் பாய்ந்து சென்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறிய, பெரிய குதிரைகளுக்கும், புதிய குதிரைகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக முன்னாள் மாவட்ட அவைத் தலைவா் இரா. உடையவா், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

என்கே - 17- ரேக்ளா

மோகனூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் பாய்ந்து சென்ற குதிரைகள்.

Dinamani
www.dinamani.com