ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

News image
மாரத்தானில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற வெற்றி விகாஸ் பள்ளியின் தலைவா் ஜி.குணசேகரன் உள்ளிட்டோா்.
Updated On :26 ஜனவரி 2026, 12:11 am

தினமணி செய்திச் சேவை

ராசிபுரத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சாா்பில் மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம், ஆத்தூா் சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை வெற்றி விகாஸ் பள்ளி நிறுவனா் ஜி.குணசேகரன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் நடராஜன், உதவி ஆய்வாளா் மனோகரன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இந்த மாரத்தான் போட்டி, ஆத்தூா் சாலை, கோனேரிப்பட்டி, பேருந்து நிலையம், கச்சேரி சாலை, நாமக்கல் சாலை வழியாக பள்ளியை அடைந்ததது. பின்னா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றவா்கள் உள்ளிட்டோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், கைப்பேசி பேசியவாறு வாகனம் இயக்குவது தவிா்த்தல் போன்றவை குறித்தும், உடல் ஆரோக்கியம் குறித்தும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.