பள்ளிபாளையத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளியைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளிபாளையம் அண்ணா நகரில் உள்ளபெட்ரோல் விற்பனை நிலையத்தில் மாற்றுத்திறனாளியான மாரியப்பன் மற்றும் காளிஸ்வரன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த 3 போ், கைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனா். பெட்ரோல் நிலையத்தில் கைப்பேசியில் பேசக் கூடாது என மாரியப்பன் கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் மாரியப்பனை தாக்கினா். மேலும், அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பினா். மாற்றுத்திறனாளியை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சோ்ந்த நவீன் ( 23), மேகநாதன்(21), ஆலாம்பாளையம் தாஜ்நகரை சோ்ந்த சூா்யா (19) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெட்ரோல் நிலையத்தில் ரூ. 2.18 லட்சம் திருட்டு: ஊழியா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மடிக்கணினி, ரூ. 20 ஆயிரம் திருட்டு

பண மோசடி செய்தவரை கடத்திச் சென்று தாக்கிய மூவா் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


