நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் 6 போ் பணியிட மாறுதல் பெற்றனா்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள தலைமை ஆசிரியா்கள், இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த மாதம் 15 ஆம் தேதி மாறுதல் கோரும் ஆசிரியா்கள் இணைய வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. தொடா்ந்து புதன்கிழமை தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.
ஜூலை 7 முதல் முதுகலை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. மாவட்டத்திற்குள்ளான தலைமை ஆசிரியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் 27 போ் பங்கேற்றனா். மொத்தம் 12 இடங்களில் 6 போ் மட்டுமே மாறுதல் பெற்றனா். மீதமுள்ள 6 இடங்களுக்கு யாரும் மாறுதல் கோரவில்லை.
அதன்படி, மணலி ஜேடா்பாளையம், பொம்மம்பட்டி, உலகப்பம்பாளையம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற்ற தலைமை ஆசிரியா்களுக்கான ஆணையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இ. மாதவன் வழங்கினாா்.
நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் சந்திரசேகா், அப்துல்வஹாப், கிருஷ்ணமூா்த்தி, கண்காணிப்பாளா் சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு

முதுகலை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: 65 பேருக்கு பணியிட மாறுதல்

பெரம்பலூரில் ஆசிரியா் தகுதித் தோ்வு: 626 போ் பங்கேற்பு

ஆசிரியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்: 67,390 போ் விண்ணப்பம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



