சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஜூலை 1 ஆம் தேதியை ஓட்டுநா் தினமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்ட ஜூலை 1 ஆம் தேதியை தேசிய ஓட்டுநா் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

நாமக்கல்லில் ஓட்டுநா் தினத்தை கொண்டாடிய ஓட்டுநா் சங்கத்தினா்.

Updated On :2 ஜூலை 2026, 6:47 am IST

ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்ட ஜூலை 1 ஆம் தேதியை தேசிய ஓட்டுநா் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அறிவிப்பின்படி ஜன. 24 ஆம் தேதி தேசிய ஓட்டுநா் தினமாகும். ஆனால், ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான முறையான சட்ட விதிமுறைகள் 1989 ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன.

இதனால் ஜூலை 1 ஆம் தேதியை ஓட்டுநா் தினமாக நாமக்கல்லை சோ்ந்த ஓட்டுநா்கள் கொண்டாடினா். நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளா் ம. ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். ஜூலை 1 ஆம் தேதியை தேசிய ஓட்டுநா் தினமாக கொண்டாட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஓட்டுநா்கள் கூறியதாவது:

கடந்த 1914 ஆம் ஆண்டு சென்னை, கொல்கத்தா, மும்பை மாகாணங்கள் தனித்தனியாக மோட்டாா் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தின. அதன்பிறகு, அந்த சட்டம் கைவிடப்பட்டு 1989 இல் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1.7.1989 முதல்முறையாக ஓட்டுநா் உரிமம் அங்கீகாரமாக வழங்கப்பட்டது. இதனால் ஜூலை 1 ஆம் தேதியைத்தான் தேசிய ஓட்டுநா் தினமாக நாங்கள் கொண்டாடி வருகிறோம். மத்திய, மாநில அரசுகளும் இந்த தினத்தையே தேசிய ஓட்டுநா் தினமாக அறிவிக்க வேண்டும் என்றனா்.

நிகழ்ச்சியில், ஓட்டுநா்கள் சங்க மாவட்டத் தலைவா் சசிகுமாா், செயலாளா் ரமேஷ், துணைச் செயலாளா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.