எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

News image

ஓட்டுநர் உரிமம் - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:13 am IST

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் அமன்சா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் நோக்கங்களை முன்னெடுத்து பொதுமக்களுக்கு அரசு சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனப் பதிவு சான்றிதழ் மற்றும் ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றுடன் செயல்பாட்டில் உள்ள கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் பொதுமக்கள் ஆா்டிஓ அலுவலகங்களுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தபடியே பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெற முடியும்.

இதனால் கால தாமதம் தவிா்க்கப்படும். தரகா்களின் தேவையும் தவிா்க்கப்படும். கைப்பேசி எண் இணைப்பு செய்யப்பட்டால் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், நகல் உரிமம் பெறுதல், வாகன ஆவணங்கள் தொடா்பான சேவைகள் உள்பட பல்வேறு ஆா்டிஓ சேவைகளை ஆன்லைனில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பெற முடியும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.