ராசிபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராசிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ஜெயலட்சுமி (60) வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.நாகலட்சுமி தலைமையில், ராசிபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
இதில், வீட்டில் 15 மூட்டைகளில் 750 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








