ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கருகிய நிலையில் முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

குமாரபாளையம் அருகே கருகிய நிலையில் கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:11 am IST

குமாரபாளையம் அருகே கருகிய நிலையில் கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கல்லாங்காட்டுவலசு பகுதியில் நல்லாத்தாள் கோயில் பின்புறம் உள்ள ஓடையில் ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக குமாரபாளையம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், அந்த உடலை மீட்டபோது சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எனத் தெரியவந்தது. அழுகிய நிலையிலும், உடல் பாதி எரிந்த நிலையிலும் இருந்ததை கண்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.