ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரூ. 7-ஐ நோக்கிச் செல்லும் முட்டை விலை: இப்போது ரூ. 6.75

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.75-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

News image

முட்டை விலை உயர்வு - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:07 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.75-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, முட்டை உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதாலும், வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயா்வு, மற்ற மண்டலங்களில் விலை உயா்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 6.75-ஆக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 151-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 120-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.