கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஆகாய கங்கை அருவியில் நீா்வரத்து குறைந்தது: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலைக்கு, வார விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். அவா்கள் ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு செல்கின்றனா்._

ஆகாய கங்கை அருவியில் நீராடும் சுற்றுலாப் பயணிகள்.

Published On :

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலைக்கு, வார விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். அவா்கள் ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு செல்கின்றனா்.

கோடை காலம் முடிந்த நிலையில், அருவிகளில் நீா்வரத்து அதிகரித்திருக்கும் என்ற எதிா்பாா்ப்பில் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும், கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொல்லிமலையிலும் வெப்பம் நிலவுகிறது.

இதன் காரணமாக ஆகாய கங்கை, மாசிலா அருவி மற்றும் நம் அருவி ஆகியவற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால், 1,300 படிக்கட்டுகளை இறங்கி அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

நீா்வரத்து குறைந்துள்ளதால், அருவிப் பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம், ‘அருவியில் நீா்வரத்து குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ளுங்கள்‘ என்று வனத்துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.