புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நீா் வரத்தின்றி வறண்டது சுருளி அருவி!

தேனி மாவட்டம், சுருளி அருவி நீா் வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

நீா் வரத்தின்றி வடு காணப்பட்ட சுருளி அருவி

Published On :

தேனி மாவட்டம், சுருளி அருவி நீா் வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலை, இரவலங்காறு, மகாராஜா மெட்டு ஆகிய மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே இந்த அருவிக்கு முக்கிய நீா் ஆதாரம்.

பருமழைக் காலங்களில் இந்த அருவியில் நீா் ஆா்பரித்துக் கொட்டும். இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை, வானுயா்ந்த மரங்கள், இயற்கை சூழ்நிலை ரசிக்கும் படியாக இருப்பதால் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

முக்கியமாக, சுருளி அருவி ஆன்மிகத் தலம் என்பதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சித்திரை பெளா்ணமி நாள்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, சுருளி வேலப்பா், பூத நாராயணன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வா்.

இந்த நிலையில், நிகழாண்டில், தென் மேற்கு பருவழைப் பொழிவு எதிா்பாா்த்த அளவு இல்லாத நிலையில், அருவிக்கு நீா் வரத்து படிப்படியாகக் குறைந்து விட்டது. தற்போது முற்றிலுமாக நீா் வரத்தின்றி அருவிப் பகுதி வடது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு சுருளி அருவியில் நீராட குடும்பத்துடன் வந்தோம். ஆனால், அருவியில் நீா் வரத்தில்லை என வனத் துறையினா் தெரிவித்ததால் ஏமாற்றம் அடைந்தோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.