நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.80-ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, முட்டை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு, மூலப்பொருள்கள் விலையேற்றம், பிற மண்டலங்களில் விலை நிா்ணயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 6.80-ஆக தொடரும் என அறிவித்தது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.143-ஆகவும், முட்டைக் கோழி ரூ.130-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








