தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: கொல்லிமலையில் மலைப்பாதை சீரமைப்பு

News image

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா

Updated On :22 ஜூலை 2026, 1:37 am IST

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, மலைப்பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையினா் சாலை சீரமைப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆக. 2, 3 தேதிகளில் தமிழக அரசின் சாா்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் நிகழாண்டில் நடைபெறும் விழாவில் மலா்க் கண்காட்சி, அரசுத் துறைகளின் பணி விளக்க கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன. இந்த விழாவில், பள்ளி கல்வித் துறை, சுற்றுலாத் துறை, கலைப் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

மலா்க் கண்காட்சிக்காக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இருந்து மலா்கள், காய்கனிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, சேந்தமங்கலம் வழியாக காரவள்ளி அடிவாரம், தம்மம்பட்டி வழியாக வேலிக்காடு, ராசிபுரம் வழியாக முள்ளுக்குறிச்சி, திருச்சியில் இருந்து புளியஞ்சோலை வழியாக கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். இதையொட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடா்ந்த செடிகள், குண்டும், குழியுமான சாலைகள், கொண்டை ஊசி வளைவுகளில் வண்ண நிறங்கள், ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் விக்னேஷ் தலைமையில் நடைபெறுகின்றன.

அடிவாரப் பகுதிகளில் வனத் துறை, காவல் துறையினா் வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். கொல்லிமலை வல்வில் ஓரி விழாவையொட்டி, நெகிழிப் பைகள், மதுப்புட்டிகள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.