நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜகவைச் சோ்ந்த பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளனா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளாா். அந்த இயக்கத்தில் சேர பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனா்.
அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவில் உள்ள ஆன்மிக பிரிவு, மகளிா் அணி உள்ளிட்டவற்றில் இருந்து மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்புகளில் உள்ள 35 போ் திங்கள்கிழமை தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பாஜக அலுவலகத்தில் தங்களது கடிதங்களை அளித்தனா்.
அவா்கள் கூறுகையில், தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், அவரது கரத்தை வலுப்படுத்த நாங்கள் பாஜகவில் இருந்து விலகுகிறோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா கடிதம் மீது முறையாக விசாரிக்கவில்லை: பேரவைத் தலைவா் மீது இன்பதுரை எம்.பி. குற்றச்சாட்டு

சேரன்மகாதேவி பேரூராட்சி திமுக உறுப்பினா் ராஜிநாமா கடிதம்

அண்ணாமலையை பாஜக ஆதரிக்காது: நிதின் நபின்

மேற்கு வங்கம்: பாஜகவில் இணைய விரும்பும் திரிணமூல் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



