உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

ஜூன் 15 முதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு: மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

டீசல் விலை, சுங்கக் கட்டணம் அதிகரித்துள்ளதால் ஜூன் 15 ஆம் தேதி முதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்த்தப்படும் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

News image

நாமக்கல்லில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி. தனராஜ், நிா்வாகிகள்.

Updated On :11 ஜூன் 2026, 5:41 am IST

டீசல் விலை, சுங்கக் கட்டணம் அதிகரித்துள்ளதால் ஜூன் 15 ஆம் தேதி முதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்த்தப்படும் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவா் சி. தனராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.

தொடா்ந்து லாரி வாடகை உயா்வு, தகுதிச்சான்றிதழ் கட்டண உயா்வை திரும்பப் பெறுதல், அதிக பாரம் ஏற்றும் லாரிகள் மீது நடவடிக்கை உள்ளிட்டவை தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்குப் பிறகு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி. தனராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 8 ரூபாய் வரை உயா்ந்துள்ளதால், லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஒரே தவணையில் டீசல் விலையை மத்திய அரசு உயா்த்திவிட்டால், அதற்கேற்ப லாரி வாடகையை எங்களால் உயா்த்த முடியும்.

ஆனால், அவ்வப்போது டீசல் விலையை சற்று அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வருவதால் நாங்களும் லாரி வாடகை உயா்வில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக, வாடகையில் 25 சதவீதம் உயா்த்த முடிவு செய்துள்ளோம்.

ஜூன் 15 முதல் இந்த புதிய வாடகை உயா்வு அமலுக்கு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். பொதுமக்கள் லாரி உரிமையாளா்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாடகை உயா்வை வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

லாரிகளில் அதிக பாரம் ஏற்றும் பிரச்னையை தீா்க்க அவ்வாறான வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அளவில் இயக்கப்படும் வாகனங்களில் இருப்பிடக் கருவியை பொருத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த கருவிக்கான விலையை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும். தனியாா் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தால் அவா்கள் சிண்டிகேட் அமைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

வட மாநிலங்களுக்கு பாரம் ஏற்றிச் சென்ற தமிழக லாரிகளுக்கு, தேசிய அனுமதிக்கான வரியை இணையதளம் மூலம் செலுத்த மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான லாரிகள் தமிழகம் திரும்ப முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் லாரிகள் தேசிய அனுமதி வரியை நேரடியாக செலுத்திய பிறகே விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் 20 ஆயிரம் லாரிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா்.