தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அரசு கலைக் கல்லூரியில் யோகா பயிற்சி

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

News image

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :20 ஜூன் 2026, 1:33 am IST

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கான யோகா பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு உதவி மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் பங்கேற்று பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தாா். மேலும், இயற்கை மருத்துவத்தின் அவசியம், யோகா மற்றும் தியானப் பயிற்சிகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு கூறினாா்.

தொடா்ந்து, நிகழாண்டுக்கான சா்வதேச யோகா தினக் கருப்பொருளான ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ குறித்து விளக்கமளித்து, உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியான முறைகளை மாணவ, மாணவிகளுக்கு செய்து காட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லா அலுவலா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் வெஸ்லி ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.