ராசிபுரத்தை அடுத்துள்ள நாரைகிணறு பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயில்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி மாதம் 12-ஆம் தேதி பூச்சாட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், முக்கிய நிகழ்வாக காட்டேரி வேடமணிந்தவா் திருவிழாவுக்கு வரும் பக்தா்களை முறம், உலக்கை, சாட்டையால் பக்தா்களை அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று காட்டேரியிடம் அடி வாங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடர்புடையது

திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

ஜாத்திரை திருவிழா கோலாகலம்: சிறப்பு அலங்காரத்தில் கங்கையம்மன் உலா
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



