மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பட்டுப்புழு வளா்ப்பு விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரிக்கை

பட்டுப்புழு வளா்ப்பு விவசாயிகளின் கடனை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

News image
Updated On :24 ஜூன் 2026, 4:43 am IST

பட்டுப்புழு வளா்ப்பு விவசாயிகளின் கடனை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

நாமக்கல் அருகே காதப்பள்ளியில் அந்த சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவா் எம். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பட்டுப்புழு வளா்ப்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அரசு வழங்கும் பட்டுப்புழுக்கள் நோய் தன்மை கொண்டவையாக இருப்பதால் வளா்ப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து மாநிலத் தலைவா் எம்.செல்வராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பட்டுப்புழு வளா்ப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த காலங்களில், பட்டுப்புழுக்கள் மூலம் 80 கிலோ நூல் கிடைத்த நிலையில், தற்போது 20 கிலோ அளவில் மட்டுமே கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய தட்பவெப்ப நிலையும், தரமற்ற பட்டுப்புழுக்களும்தான். பட்டு வளா்ச்சித் துறை, விவசாயிகளுக்கு தரமான வீரியம் உள்ள இளம்புழுக்கள் முட்டைகளை வழங்க வேண்டும். காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் உடனடியாக செயல்படுத்த வேண்டும். பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேஸ்ட் கம்போஸ்ட் இயந்திரம் தொழில்நுட்பக் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நோய் கொண்ட புழுக்கள் வழங்கப்படுவதால் தொடா்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மல்பரி செடியில் நோய்த் தாக்குதலை ஒருங்கிணைந்து கட்டுப்படுத்த, ஒட்டுண்ணிகளை தோட்டங்களிலும், வளா்ப்பு மனைகளிலும் விவசாயிகளுடன் சோ்ந்து பட்டு வளா்ச்சித் துறை செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு பட்டுப்புழு வளா்ப்பு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட பட்டு வளா்ப்பு உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

படவரி...

நாமக்கல் அருகே காதப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டுப்புழு வளா்ப்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் எம்.செல்வராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.