முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

எஸ்.வாழவந்தி புன்னைவனநாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மோகனுாா் வட்டம் எஸ்.வாழவந்தியில் உள்ள அழகுபூரணி சமேத புன்னைவனநாதீஸ்வரா் கோயில், மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 5:39 am IST

மோகனுாா் வட்டம் எஸ்.வாழவந்தியில் உள்ள அழகுபூரணி சமேத புன்னைவனநாதீஸ்வரா் கோயில், மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை இரவு கிராம சாந்தி, செவ்வாய்க்கிழமை அதிகாலை விநாயகா் வழிபாடு, மஹாகணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை, பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வருவதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், கலசம் வைத்தல், மாலையில் கும்ப அலங்காரம், முதல்கால யாக வேள்வி, தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை புண்யாகம், அனைத்து மூா்த்திகளுக்கும் காப்புக் கட்டுதல், நாடி சந்தானம், இரண்டாம் கால யாக வேள்வி, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன், புன்னைவனநாதீஸ்வரா், அழகுபூரணி, மகா நந்தி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.