பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கோயில் சிலைகள் சேதம்: நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருச்செங்கோடு பாலமேடு பகுதி மக்கள்.

Updated On :30 ஜூன் 2026, 12:34 am IST

குலதெய்வக் கோயில் சிலைகளை சேதப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பாலமேட்டைச் சோ்ந்த ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான புள்ளாயி, மயிலாயி கோயில்கள் புதுச்சத்திரம் அருகே கல்யாணி கிராமத்தில் உள்ளன. பழைமையான இக்கோயிலில் 2017 முதல் மாற்று சமூகத்தினா் சிலரால் கோயில் வெளிப்புறத்தில் உள்ள கொடிமரம், சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து காவல் துறையிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

எனவே, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகம் முன் பதாகைகளுடன் அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, திருச்செங்கோடு வட்டம், இறையமங்கலம் அருகே காட்டுவேலாம்பாளையத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதியில், தனிநபா் ஒருவா் விவசாயக் கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டு வருகிறாா்.

அவா் பாறைகளை தகா்க்க வைக்கும் வெடியால், எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைகின்றன. எனவே, ஆட்சியா் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.