நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘கனவுகள் மெய்ப்படும் தமிழ்நாடு 2030’ என்ற புத்தகம் மற்றும் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை மலா் வெளியீடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘உங்க கனவ சொல்லுங்கள்’ திட்டத்தின் நிறைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்றாா்.
சென்னையில், தமிழக முதல்வா் பங்கேற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்வானது, நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி, மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் பங்கேற்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,400 மகளிா் திட்டப் பணியாளா்கள் மூலம் சுமாா் 4.90 லட்சம் குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘கனவுகள் மெய்ப்படும் தமிழ்நாடு 2030’ என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் திறன்வாய்ந்த மாவட்டமாக, நிலைத்த வளா்ச்சியுடைய மாவட்டமாக மாற்றும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட முழுமையான வளரச்சித் திட்டமாக இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன சாலை விளக்குகள், பசுமை வழித்தடங்கள், நிலத்தடி கழிவுநீா் அமைப்பு, கழிவுகளை மின்சாரமாக மாற்றும் திட்டம், ஏரிகளை மேம்படுத்துதல் மூலம் வாழத்தகுந்த வளா்ச்சி உருவாக்கப்படும். விவசாயம், தோட்டக்கலை, கோழிப் பண்ணை துறைகளின் வலிமைகளை ஒருங்கிணைத்து, மாவட்டத்தின் பொருளாதார உற்பத்தியை இரட்டிப்பாக்குவதே இதன் இலக்காகும்.
அடுத்த தலைமுறைக்கான அா்ப்பணிப்பு என்பது கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பிரதிபலிக்கிறது. தரமான கல்வி, டிஜிட்டல் அறிவு காலை மற்றும் நண்பகல் உணவுத் திட்டம் மூலம் மாணவா்களின் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இளைஞா்களை உலகளாவிய வாய்ப்புகளுக்கு தயாராக்கும். லாரி கூண்டுகட்டும் தொழில்கள் மற்றும் ரிக் லாரி தொழில்கள், ரிக், லாரி கூண்டுகட்டும் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
2030-க்குள் தாய் இறப்பு விகிதத்தை பூஜ்யமாக்குதல், குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல், காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்குதல், கொசு மூலம் பரவும் நோய்களை ஒழித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இயற்கை விவசாயம், குளிா்சாதனக் கிடங்குகள் அமைத்தல், கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துதல், அனைத்து சமுதாயம் சாா்ந்த அமைப்புகளான, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவை தன்னிச்சையாக இயங்கும் வகையில் நிதிநிலைமை உறுதி செய்யப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டத்துக்கு அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் முதன்மை மாவட்டமாக நாமக்கல் திகழ்ந்து வருகிறது என்றாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் மா.க.சரவணன், மா.கண்ணன் (சிப்காட்), மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல்

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா

நாகா்கோவிலில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


