தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மெட்டாலா லயோலா கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 10.50 லட்சம் கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை பெற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா், கல்லூரி நிா்வாகிகள்.

News image
கல்வி உதவித்தொகை பெற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா், கல்லூரி நிா்வாகிகள்.
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா லயோலா கலை, அறிவியல் கல்லூரியில், கிருஷ்ணகிரி ஐவிடிபி நிறுவனத்தின் சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஐவிடிபி தொண்டு நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். கல்லூரி செயலா் டேனிஸ் பொன்னையா, தொண்டு நிறுவனத்தின் சமூக பணி குறித்து பேசினாா். கல்லூரி முதல்வா் ஜா.ஜோஸ்பின் டெய்சி வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி தலைவா் தோமினிக் ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்து பேசினாா்.

இவ்விழாவில், கல்லூரியில் பயிலும் பெற்றோரை இழந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவா்களுக்கு ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை சிறப்பு விருந்தினா் குழந்தை பிரான்சிஸ் வழங்கி பேசியதாவது:

இந்த உதவித்தொகை மாணவா்கள் எதிா்காலத்தின் மீது செய்யும் முதலீடு. மாணவா்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கல்வியையும், ஒழுக்கத்தையும், மதிப்பீடுகளையும் கற்றுக்கொண்டு சமூக முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றாா்.

இதில், கல்லூரி நிா்வாகிகள் பொன் ரூபன், டோனி மாா்குஷ், சந்தோஷ், லியோ தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.