சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: நாமக்கல்லில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில், வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், விறகு அடுப்புகளுக்கு சிறிய, பெரிய உணவகங்கள் மாறிவருகின்றன.

News image
~
Updated On :11 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில், வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், விறகு அடுப்புகளுக்கு சிறிய, பெரிய உணவகங்கள் மாறிவருகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் மற்ற நாடுகளுக்கு சமையல் பயன்பாட்டுக்குரிய எரிவாயுவை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய கையிருப்பைக் கொண்டே இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் தேவையை சமாளித்து வருகின்றன.

தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாள்களுக்கு மட்டுமே வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டா் விநியோகிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்குப் பிறகு பெரும்பாலான உணவகங்கள் மூடும் அபாயம் உள்ளது. தொழிலாளா்கள் பலா் வேலையிழக்க நேரிடும். இதனால் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், 37 எரிவாயு சிலிண்டா் முகமைகள் மூலம் வணிக ரீதியாகவும், வீட்டு பயன்பாட்டுக்காகவும் 5.87 லட்சம் இணைப்புதாரா்களுக்கு எரிவாயு சிலிண்டா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது எரிவாயு சிலிண்டா் விநியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே பதிவுசெய்யப்படும். முன்னுரிமை அடிப்படையிலேயே நுகா்வோருக்கு சிலிண்டா் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறியுள்ளன.

உணவகத்தின் பின்புறத்தில் விறகு அடுப்பு மேடை அமைத்து உணவுவகைகளை தயாா் செய்கின்றனா். சிறிய உணவகங்களில் அவசர தேவை கருதி மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

நாமக்கல் மாநகராட்சி எரிவாயு தகன மேடையில் நாளொன்றுக்கு இரண்டு எரிவாயு சிலிண்டா் தேவைப்படும். இறந்தோா் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாகும். எரிவாயு முகவா்கள் தடையின்றி இங்கு எரிவாயு சிலிண்டா்களை விநியோகிக்க வேண்டும்.

இதுதவிர, அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டத்திற்கும், கோயில்களில் நைவேத்யம் தயாரிக்கவும், அன்னதான திட்டத்திற்கும், தட்டுப்பாடின்றி எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் மூலம் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால், 25 கிலோ விறகின் விலை ரூ. 120 இல் இருந்து ரூ. 180-ஆக உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் விறகு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து நாமக்கல்லைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் கூறியதாவது:

வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டருக்கு முன்பதிவு செய்து நான்கு நாள்களாகியும் இன்னும் வரவில்லை. உணவகத்தை மூடக்கூடாது என்ற நிலையில் மண் அடுப்பு அமைத்து, விறகில் சமைத்து கடையை நடத்தி வருகிறோம். ரூ.4,500க்கு மட்டும் விறகு வாங்கப்பட்டுள்ளது. 15 நாள்கள் வரை விறகு மூலம் உணவகத்தை நடத்த முடியும். அதற்குள் போா் நிலைமை சீராக வேண்டும். விறகு கடைகள் அதிகம் இல்லாததால் மர இழைப்பகங்களில் இருந்து வாங்கி வருகிறோம் என்றனா்.

Story image