கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தேய்பிறை அஷ்டமி: பரமத்தி வேலூா் பகுதி பைரவா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பைரவருக்கு புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த எல்லைமேட்டில் உள்ள இரட்டை ஈஸ்வரா் கோயில் பைரவா்.

Updated On :11 மார்ச் 2026, 8:56 pm

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பைரவருக்கு புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், பழைய காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசிவிஸ்வநாதா், எல்லைமேட்டில் உள்ள இரட்டை ஈஸ்வரா் கோயிலில் உள்ள பைரவா் உள்ளிட்ட கோயில்களில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.