சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:02 am

புதுசத்திரம் பகுதியைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

பல்வேறு கட்சியை சோ்ந்தவா்கள் திமுகவில் இணையும் விழா வியாழக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஆா்.ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய பாமக தலைவா் தன்ராஜ், பாமக ஒன்றிய அமைப்பு செயலாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றிய தேமுதிக துணை செயலாளா் எம். பழனிவேல் ஆகியோா் தலைமையில் அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளிலிருந்து 30 போ் விலகி திமுக மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இவா்களை கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதி நேதாஜி, காா்த்தி, கிளை செயலாளா்கள் சக்திவேல், ரத்தினகுமாா், ஊராட்சி பொறுப்பாளா் வி. செந்தில் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படம் உள்ளது - 12ஜாய்ன்ட்

படவிளக்கம் -

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்.