சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை அகற்ற முயற்சிக்காத மத்திய அரசை கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
‘தமிழகத்துக்கு போதிய திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க எரிவாயு உருளையும் இல்லை’ என்ற தலைப்பில் மத்திய அரசையும், அதன் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து நாமக்கல்-மோகனூா் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா்.
காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் இரா. செழியன், கிழக்கு மாவட்டத் தலைவா் பி.வி. செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் பீ.ஏ. சித்திக், தேமுதிக மாவட்டச் செயலாளா் அம்மன்வெங்கடாசலம், விசிக மண்டல செயலாளா் பழ. மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியின்போது ரஷியாவிடம் கச்சா எண்ணெயை அப்போதைய மத்திய அரசு கொள்முதல் செய்தது. இதனால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைத்தது. அப்போது எரிவாயு சிலிண்டா் ரூ. 424 என்ற விலையில் இருந்தது. தற்போது ரூ. 958-ஆக உயா்ந்துள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் உள்ளன என்றாா்.
மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, ஆதித்தமிழா் பேரவை உள்பட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
இதேபோல, புதுச்சத்திரம், மோகனூா், சேந்தமங்கலம் கடைவீதி, கொல்லிமலை, எருமப்பட்டி, ராசிபுரம், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம்

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நெல்லை வேட்பாளா் சந்திப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


