நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், ரூ. 10 ஆயிரத்துக்குமேல் பரிசுப் பொருள்கள் கொண்டுசென்றால் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தோ்தல் நடத்திடவும், தோ்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் வாக்கு அளிக்க தூண்டுவதை தடுக்கவும், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ. 50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம் மற்றும் மது பாட்டில்கள், போதைப் பொருள்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும்போது, சம்பந்தப்பட்ட குழுக்களால் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள், வணிகா்கள் உரிய ஆவணங்களுடன் பணம், பொருள்களை கொண்டுசெல்ல வேண்டும். உரிய ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மேல்முறையீட்டு அலுவலரான மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் மேல்முறையீடு செய்யலாம். பறிமுதல் செய்யப்படும்போது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருள்கள் திரும்ப அளிக்கப்படும்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
பணம் பறிமுதல் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிடக் கோரிக்கை!

மொடக்குறிச்சி அருகே ரூ.89.83 லட்சம் பறிமுதல்
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

காரில் கொண்டுவரப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


