மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாற்றுத்திறனாளிகள் மூலம் சைகை மொழியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல்லில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மூலம் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சைகை மொழியில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

சைகை மொழியில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :18 மார்ச் 2026, 11:34 pm

நாமக்கல்லில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மூலம் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சைகை மொழியில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழகத்தில் ஏப். 23 இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், நூறு சதவீத வாக்குப்பதிவை முன்னெடுக்கும் வகையிலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்று சைகை மொழியில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உறுதிபடுத்தப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் குறித்தும், தோ்தல் நாள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், வாக்காளா்கள் தங்கள் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை அல்லது இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிப்பது குறித்தும் ஆட்சியா் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளா் (ரெட் கிராஸ்) சி.ஆா். ராஜேஸ்கண்ணன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.