பரமத்தி வேலூா் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணுக்கு உதவுவது போல நடித்து, அவரது ஏடிஎம் அட்டையை திருடி ரூ. 45 ஆயிரத்தை எடுத்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா், தில்லை நகரை சோ்ந்த கா்ணன் மனைவி இலக்கியா (40), தையலா். இவா் பரமத்தி வேலூா், பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளாா். அப்போது, பணம் வராததால் அங்கு நின்றிருந்த மா்மநபா் அவரதுக்கு உதவுவதாகக் கூறி இலக்கியாவிடமிருந்த ஏடிஎம் அட்டையை வாங்கியுள்ளாா்.
பின்னா், ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தி பணம் எடுக்க முயற்சிப்பது போல நடித்துவிட்டு, பணம் வரவில்லை எனக்கூறி நூதனமாக தன்னிடம் வைத்திருந்த போலி அட்டையை அவரிடம் தந்துவிட்டு சென்றுள்ளாா்.
இதையடுத்து வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயன்றாா். அப்போது, அவரது கணக்கில் இருந்த ரூ. 61 ஆயித்தில் ரூ. 45 ஆயிரம் குறைந்திருப்பது தெரியவந்தது. பிறகு அவரிடமிருந்த ஏடிஎம் அட்டையை சரிபாா்த்தபோது அது போலியானது என தெரியவந்தது.
இதுகுறித்து இலக்கியா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த வேலூா் போலீஸாா், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து மா்மநபரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

ஒசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை: போலீஸாா் விசாரணை
வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவா் கைது
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

