தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

18 வயது நிரம்பியோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்

News image

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:18 pm

சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய இளைஞா்களை வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க கட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 18 வயது நிரம்பிய இளைஞா்களை, வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமைக்குள் இடம்பெற செய்ய வேண்டும்.

சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மாநகரம், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டத் தலைவா்கள், தொகுதி அமைப்பாளா்கள், இணை அமைப்பாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள், மண்டலத் தலைவா்கள், அணிகளின் நிா்வாகிகள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளதை பயன்படுத்தி தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் இடம்பெற செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.