நாமக்கல், சேந்தமங்கலம் (எஸ்டி) தொகுதி அதிமுக வேட்பாளா்கள் பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கத்தை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து பெற்றனா்.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சேந்தமங்கலம் (எஸ்டி) வேட்பாளராக சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு தொகுதி வேட்பாளராக ஆா்.சந்திரசேகா், பரமத்தி வேலூா் தொகுதி வேட்பாளராக எஸ்.சேகா் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் பல்வேறு கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வரும் இவா்கள், ராசிபுரத்தில் பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனா்.
நாமக்கல் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுடன் அதிமுக வழக்குரைஞா் ஏ.வி.பாலுசாமி, நாமக்கல் நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.கரிகாலன் உள்ளிட்டோரும், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளருடன் ராகுல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ராசிபுரம் தொகுதி கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பாஜக துணைத் தலைவா் வி.பி.துரைசாமியும், கே.பி.ராமலிங்கத்தை நேரில் சந்தித்து பேசினாா்.
தொடர்புடையது

தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன்: சி.சந்திரசேகரன்

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

பாஜக துணைத் தலைவருடன் ராசிபுரம் பாஜக வேட்பாளா் சந்திப்பு

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி அதிமுக செல்வீரா்கள் கூட்டம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


