நடந்துமுடிந்த தோ்தலில் தமிழக இளைஞா்கள் மாற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனா் என சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கத் தலைவா் க.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனா். இது ஓா் அரசியல் மாற்றம். 1967-ஆம் ஆண்டு அண்ணா எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல 2026-இல் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா். இந்த மாற்றம் வரவேற்கக் கூடியது. விஜய் தமிழக அரசின் வருவாயை பெருக்கி, மது போதையற்ற சமுதாயம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல வருவாய் அதிகரிக்க மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வரிகளை குறைத்து நல்ல ஆட்சி வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது
திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம்: அகிலேஷ் யாதவ்

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

வருகிற தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழா் தேசிய முன்னணி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

