தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு

நாமக்கல் - பரமத்தி சாலையில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

News image

நாமக்கல் - பரமத்தி சாலையில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

Updated On :9 மே 2026, 12:04 am IST

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்ததால், சாலையில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் கொளுத்தியது. வழக்கத்தைக் காட்டிலும் 2, 3 டிகிரி அளவில் கூடுதலாக இருந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். வெப்ப அலையின் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியில் வருவதற்கே மக்கள் தயங்கினா்.

மே 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டது. ஆனால், வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. அந்த வகையில், நாமக்கல் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

இதனால், நாமக்கல் - சேலம் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா். இருசக்கர வாகனங்களும் மழைநீரில் தத்தளித்தபடி சென்றன. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

வரும் நாள்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன், பலத்த மழை பெய்ததால் மாநகரப் பகுதிகளில் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.