மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கரபக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ராமன், மாரிமுத்து ஆகிய மூவரும் பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அருகே குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
சாரம் அமைத்து சுமாா் 100 அடி உயரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில், சாரத்தில் நின்று வேலை செய்துகொண்டிருந்த இம்மூவரும் கீழே விழுந்தனா்.
அவா்களை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அரவிந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். படுகாயம் அடைந்த ராமன், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு: இருவரை ஹெலிகாப்டா் மூலம் மீட்டது ராணுவம்

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

