இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ராசிபுரத்தில் ஆட்டோ மோதி மின்கம்பம் சேதம்: மின் விநியோகம் பாதிப்பு

News image

ஆட்டோ மோதியதில் சேதமடைந்த மின்கம்பம்.

Updated On :11 மே 2026, 12:11 am IST

ராசிபுரம் பட்டணம் சாலையில் ஆட்டோ மோதி மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

ராசிபுரம் பட்டணம் சாலைப் பகுதியில் சாலையோர மின்கம்பம் மீது ஆட்டோ மோதியது. இதில் மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் மின் விநியோகத்தை துண்டித்து சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இதனால் நகரில் பட்டணம் சாலை, வி.நகா், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா். சேதமடைந்த மின்கம்பத்தை மின் ஊழியா்கள் சரிசெய்ததை அடுத்து சில மணி நேரத்திற்கு பின் மின்விநியோகம் சீரடைந்தது.