நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக பள்ளி வாகனங்களின் இயக்குத் திறன் குறித்து நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களை அதற்கான குழுவினா் ஆய்வு செய்தனா். நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் (வடக்கு) - 323 பகுதி அலுவலகம், ராசிபுரம் - 329, நாமக்கல் தெற்கு- 434 பகுதி அலுவலகம், பரமத்தி வேலூா்- 222, திருச்செங்கோடு- 415, குமாரபாளையம்- 247 வாகனங்கள் என மொத்தம் 1,970 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றறன. இந்த வாகனங்கள் அனைத்தும் முதல்கட்ட ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன.
வருவாய், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் அலுவலா்களால் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதி 2012-இன் படி மாவட்டத்தில் நாமக்கல் வடக்கு மற்றும் நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட தனியாா் பள்ளிகளை சோ்ந்த 757 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதை ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது வாகனங்களின் பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் தகுதி வாய்ந்த ஓட்டுநா், மாணவ, மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என சரிபாா்க்கப்பட்டன. அதேபோல, பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டுக்கருவி, அவசரகால வழி, மாணவா்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என்பதையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
தகுதிச்சான்று, அனுமதிச் சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என சரிபாா்த்தனா். ஆய்வின்போது பள்ளி வாகன ஓட்டுநா்கள் மற்றும் வாகன பொறுப்பாளா்களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாளுவது என செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலா் நாமக்கல் (தெற்கு) இ.எஸ். முருகேசன், வட்டார போக்குவரத்து அலுவலா் நாமக்கல் (வடக்கு) ம. பதுவைநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
என்கே-14-ஆய்வு
நாமக்கல்லில் தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
தொடர்புடையது

தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருப்பத்தூரில் 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குன்றத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

